வைரஸ் பாதிப்பை 10 நிமிடங்களில் கண்டறியும் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் .!
வைரஸ் பாதிப்பை 10 நிமிடங்களில் கண்டறியும் நவீன முகக்கவசத்தை ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆன்டிபாடிகள் போன்ற நோய்க் கிருமிகளின் தனித்துவமான புரதங்களை அடையாள காணக்கூடிய ஒரு வகை செயற்கை மூலக்கூறான அப்டேமர்களைக் கொண்ட சிறிய சென்சார் பொருத்தப்பட்ட முகக்கவசங்களை வடிவமைத்துள்ளனர்.
இந்த சென்சார் மூலம், ஒரே நேரத்தில் காற்றில் கலந்திருக்கும் சார்ஸ்-கோவிட், H1N1 உள்ளிட்ட வைரஸ்களை கண்டறிந்து, முகக்கவசம் அணிந்திருப்பவரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments